சமீபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் அதிமுக உறுப்பினர் வைத்த பேனர் விழுந்து இறந்ததை மேற்கோள் காட்டி, 'தமிழ்நாடும், தமிழ் மக்களும் சுபஸ்ரீயின் மரணத்துக்காக போராடிக் கொண்டிருக்கும்போது, தமிழ்நாடு அரசு உங்கள் பேனர்களை வைக்க நீதிமன்றத்தில் அனுமதி கோருகிறது' என்று ட்வீட் செய்திருந்தார்.
பிரதமர் மோடிக்கு பேனர் வைக்கும் அதிமுக, எதிர்க்கும் கமல்! - பிரதமர் மோடி
நடிகர் கமல்ஹாசன் பேனர் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வரக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். மஹாபலிபுரத்திற்கு வருகை புரியும் பிரதமர் மோடி, சீன பிரதமரின் பேனர்கள் வைக்க தமிழ் நாடு அரசு உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டதையடுத்து இக்கோரிக்கையை கமல் ஹாசன் விடுத்துள்ளார்.
கமலஹாசன்
தமிழ்நாடு அரசின் பேனர் வைக்க அனுமதி கோரிய இச்செயல் பல சமூக செயற்பாட்டாளர்களின் கோபத்தை தூண்டியுள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும், வியாழன் அன்று தமிழ்நாடு அரசின் நடவடிகையை எதிர்த்து உறுதிச்சான்று பதியப் போவதாக திட்டமிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: அரசால் கண்டுகொள்ளப்படாத தடுப்பணை; களத்தில் இறங்கிய பொதுமக்கள்
Last Updated : Oct 3, 2019, 7:04 AM IST