தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தடையை மீறிய இளைஞர், மெழுகுவர்த்தி பரிசளித்த காவலர்! - தடையை மீறிய இளைஞர், மெழுகுவர்த்தி பரிசளித்த காவலர்

பெங்களூரு: ஊரடங்கு தடையை மீறிய இளைஞருக்குக் காவலர்கள் மெழுகுவர்த்தி பரிசளித்தனர்.

COVID-19  lockdown  Karnataka government  Karnataka police  social distancing  தடையை மீறிய இளைஞர், மெழுகுவர்த்தி பரிசளித்த காவலர்  கோவிட்19 பாதிப்பு, கரோனா வைரஸ், கர்நாடகா, கல்புர்கி
COVID-19 lockdown Karnataka government Karnataka police social distancing தடையை மீறிய இளைஞர், மெழுகுவர்த்தி பரிசளித்த காவலர் கோவிட்19 பாதிப்பு, கரோனா வைரஸ், கர்நாடகா, கல்புர்கி

By

Published : Apr 5, 2020, 8:49 PM IST

கர்நாடக மாநிலம், கல்புர்கி சவுக் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில், தடுப்பை ஏற்படுத்தி பாதுகாப்பு பணிகளில் காவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக 50க்கும் மேற்பட்டவர்கள் சிக்கினர்.

அவர்களுக்கு காவலர்கள் நூதன தண்டனையை வழங்கினர். தொடர்ந்து அவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. அதன்பின்னர், ஊரடங்கு உத்தரவை மதிப்பேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து அந்த 50 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்களுக்கு பிரதமரின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு தீபம் ஒளிரச் செய்யும் வகையில் காவல்துறையினர் மெழுகுவர்த்தியைப் பரிசளித்தனர். கடந்த 3 நாட்களில் முழு அடைப்பை மீறி, சுற்றித் திரிந்த 110 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த வாரம் கூட நகரத்தில் காவல்துறையினர் முழு அடைப்பை மீறுபவர்களை வீதிகளை துடைக்கச் செய்து தண்டித்தனர்.
வடக்கு கர்நாடகாவில் உள்ள இந்த மாவட்டத்தில்தான் 76 வயதான முதியவர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு நாட்டின் முதலாவதாக உயிரிழந்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details