இந்தியாவில் கரோனா தொற்று காரணமாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அனைத்து வித படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும்மாறு அந்த அந்த சங்கங்கள் திரை பிரபலங்களிடம் கேட்டுவருகின்றன.
அந்த வகையில், கரோனா தடுப்பு நிதியாக 6 லட்சம் ரூபாய்யை நடிகை காஜல் அகர்வால் வழங்கியுள்ளார். அதில் ஃபெப்சி சங்கத்திற்கு ரூ. 2 லட்சமும் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சமும் மகாராஷ்டிரா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சமும் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கியுள்ளார்.
இதையடுத்து உலகளவில் விலங்குகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பீட்டா அமைப்பு காஜல் அகர்வாலிடம் உதவி கோரியுள்ளது. இதுகுறித்து பீட்டா இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த ஊரடங்கிலும் விலங்குகளின் நலனுக்காக நீங்கள் (காஜல் அகர்வால்) செயல் பட்டு வருகிறீர்கள். எனவே தங்களால் முடிந்த நிதியுதவி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். பீட்டா இந்கியாவுக்கு பதிலளிக்கும் விதமாக காஜல் தனது ட்விட்டர் பக்கதில், வாயில்லா ஜீவன்களுக்கு நாம் அனைவரும் தயவு செய்து உதவுவோம் என ட்வீட் செய்துள்ளார்.
மும்பையில் இருக்கும் பல ஏழை எளிய மக்களுக்கும் இந்த ஊரடங்கு நேரத்தில் உணவுகளை வழங்க காஜல் அகர்வால் ஏற்பாடு செய்துள்ளார்.