தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த கஃபீல் கான் - மருத்துவர் கஃபீல் கான்

டெல்லி: தேசிய பாதுகாப்புச் சட்டம், உபா சட்டம் ஆகியவற்றை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நிற்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்த கஃபீல் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

kafeel-khan-meets-priyanka-gandhi-thanked-her-for-help
kafeel-khan-meets-priyanka-gandhi-thanked-her-for-help

By

Published : Sep 22, 2020, 1:34 AM IST

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மருத்துவர் கஃபீல் கானை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, உத்தரப் பிரதேச அரசால் கஃபீல் கான் விடுவிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து கஃபீல் கான் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என வதந்திகள் பரவியது. இந்தநிலையில் கஃபீல் கான் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்தார்.

அப்போது, கைது செய்யப்பட்ட காலத்திலும் அதற்குப் பின்னரும் காங்கிரஸ் வழங்கிய உதவி மற்றும் ஆதரவுக்காக பிரியங்கா காந்திக்கு காபீல் கான் நன்றி தெரிவித்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது கஃபீல் கானின் மனைவி மற்றும் குழந்தைகளும் இருந்தனர்.

அப்போது, தேசிய பாதுகாப்புச் சட்டம், உபா சட்டம் ஆகியவற்றை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நிற்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியிடம் கஃபீல் கான் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில் உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு மற்றும் கட்சியின் மாநில சிறுபான்மை குழுவின் தலைவர் ஷாஹனாவாஸ் ஆலம் ஆகியோரும் உடனிருந்தனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு கோரக்பூர் பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததால் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்தனர். இதற்காக மருத்துவர் கஃபீல் கான் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அதன் பின்னர் நடந்த துறை ரீதியான விசாரணையில் கஃபீன் கான் மீதான குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டது.

தொடர்ந்து ஆலிகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேசியதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இதனைத்தொடர்ந்து இவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் பலரும் கஃபீல் கானுக்கு ஆதரவாக பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜனநாயக இந்தியாவில் தொடரும் அடக்குமுறை: எம்பிக்கள் சஸ்பெண்ட் பற்றி ராகுல் காந்தி!

ABOUT THE AUTHOR

...view details