கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவக்குமார் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை நோட்டிஸ் அனுப்பியது. இதனையடுத்து, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் டி.கே. சிவக்குமார் நேரில் ஆஜரானார். அவரிடம் நான்கு நாட்களாக தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், சட்ட விரோத பண பரிவரத்தனை வழக்கில் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
”கைது செய்த பாஜக நண்பர்களுக்கு வாழ்த்துகள்” - டி.கே.சிவக்குமார் கிண்டல் - why dk sivakumar arrest
தன் கைது நடவடிக்கை திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய பாஜக நண்பர்களுக்கு வாழ்த்துகள் என அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள டி.கே.சிவக்குமார் நக்கலாக ட்வீட் செய்துள்ளார்.
இதனையடுத்து, டி.கே.சிவக்குமார் தன்னை கைது செய்ததற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் நக்கலாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “என்னை கைது செய்யும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய எனது பாஜக நண்பர்களுக்கு வாழ்த்துகள். அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கெதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. நான் பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், இந்த நிகழ்வினால் கட்சி தொண்டர்களும் நலன் விரும்பிகளும் என்னை வெறுத்துவிடாதீர்கள் எனவும், சட்டவிரோதமாக நான் எதுவும் செய்யவில்லை, சட்டம் என்னோடு துணை நிற்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்திய அரசியலில் முக்கியப் புள்ளியான இவரை கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கையென காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.