மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக கருதப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா மார்ச் 10ஆம் தேதி அக்கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து, நேற்று பாஜக தேசியத் தலைவர் ஜே. பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரை அவர் சந்தித்து பேசினார்.
இதுகுறித்து அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்தியப் பிரதேச மக்களுக்கு சேவை செய்ய அவர் கட்சியில் இணைந்துள்ளது பயன்படும்" என பதிவிட்டுள்ளார்.
சிந்தியா இணைந்தது குறித்து ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "சந்தியாவை இன்று சந்தித்தேன். பாஜகவில் அவரை வரவேற்கிறேன். கட்சியை வலுப்படுத்த அவர் உதவுவார். எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
முக்கிய தலைவர்களை சந்தித்தது குறித்து சந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜே. பி. நட்டா, மோடி, அமித் ஷா ஆகியோருக்கு என்னை கட்சியில் சேர்த்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது எனது வாழ்க்கையில் திருப்புமுனை மட்டுமல்ல. மோடியின் தலைமை கீழ் பொது மக்களுக்கு சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பு" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக எம்பிக்கள் குழு வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு!