தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலைமை நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணை குழு முன் ஆஜர்! - sexal harassment case

டெல்லி: முன்னாள் பெண் ஊழியர் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தும் குழு முன்பு இன்று தலைமை நீதிபதி ஆஜரானார்.

தலைமை நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணை குழு முன் ஆஜர்!

By

Published : May 2, 2019, 9:52 AM IST

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்தார். இதனை விசாரிப்பதற்கு நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் பெண் நீதிபதிகள் இந்து மல்ஹோதரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மூன்று பேர் கொண்ட குழு முன்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆஜரானர். இதில் போதிய அளவு அவர் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details