ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நால்வரை ஹைதராபாத் காவல் துறையினர் என்கவுன்டர் செய்தனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே பங்கேற்றார்.
என்கவுன்டரால் நீதி நிலைநாட்டப்படாது - எஸ்.ஏ. பாப்டே - என்கவுன்டரால் நீதி நிலைநாட்டப்படாது
ஜெய்பூர்: பழிவாங்கும் செயலே நடந்துள்ளது, நீதி நிலைநாட்டப்படவில்லை என ஹைதராபாத் என்கவுன்டர் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளால் நாடு வீரியம் அடைந்துள்ளது. குற்ற செயல்களுக்கு நீதி வழங்க நீதித்துறை அதிக நேரம் எடுத்துக்கொள்வதை திருத்திக்கொள்ள வேண்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஆனால், நீதியை உடனடியாக வழங்க முடியாது. பழிவாங்கும் செயலில் நீதி வெளிப்படாது. பழிவாங்கும் செயலால் நீதி நிலைநாட்டப்பட்டால், அதன் பண்பை அது இழந்துவிடும்" என்றார்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக அரசு
!