தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலைமை நீதிபதி பாலியல் வழக்கு அமர்வில் இணைந்த இந்து மல்ஹோத்ரா - ரஞ்சன் கோகாய்

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வில் இருந்து ரமணா விலகியுள்ளதையடுத்து இந்து மல்ஹோத்ரா தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.

SC

By

Published : Apr 26, 2019, 9:21 AM IST

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்தப் புகார் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, பாப்டே, ரமணா ஆகிய நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வில் இருந்து நீதிபதி ரமணா விலகுவதாக அறிவித்தார். சந்தேகத்திற்கு இடமின்றி விசாரணை நடைபெறவே இந்த அமர்வில் இருந்து விலகுவதாக தனது முடிவு குறித்து ரமணா கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், ரமணாவுக்கு பதிலாக நீதிபதி இந்து மல்ஹோத்ரா அமர்வில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ட்விட்டர் பதிவு

ABOUT THE AUTHOR

...view details