டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹிமா கோஹ்லி, தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஹிமா கோஹ்லி பதவியேற்பு! - ஹிமா கோஹ்லி
ஹைதராபாத்: தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஹிமா கோஹ்லி இன்று (ஜனவரி 7) பதவியேற்றுக் கொண்டார்.

ஹிமா கோஹ்லி
இந்நிகழ்ச்சியில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மத்திய இணையமைச்சர் கிஷண் ரெட்டி, மாநில அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆர்.எஸ். சவுகான் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த புதிய நியமனம் நடைபெற்றது.
ஹிமா கோஹ்லி பதவியேற்பு