ஒடிசாவின் பந்தூடி பகுதியிலுள்ள கோண்டோ பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஜூலிமா. குடும்பத்தில் நிலவி வந்த கடும் ஏழ்மை காரணமாகப் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய அவர், குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குச் சென்றார். அப்போது தொண்டு நிறுவனம் ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், குழந்தை திருமணங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடிவந்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் ஜூலிமாவின் முயற்சியால் அவரது பழங்குடியினத்தில் நடைபெறவிருந்த 12 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பின் திறந்தவெளி பள்ளில் சேர்ந்து தனது படிப்பைத் தொடர்ந்த அவர், தனது நண்பர்களையும் அந்த பள்ளியில் சேர்த்து அவர்களும் கல்வி கற்க உதவியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய அவரது நண்பர்கள், திறன் சார்ந்த பயிற்சிகளை பெறவும் ஜூலிமா உதவியுள்ளார்.