தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வரதட்சணை கேட்டு நீதிபதி மருமகளை தாக்கிய விவகாரம்: வைரலாகும் சிசிடிவி காட்சி! - மருமகளை தாக்கும் வீடியோ

ஹைதராபாத்தின் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ராமமோகன ராவ் தனது மருமகளை கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ramamohana-rao

By

Published : Sep 20, 2019, 11:49 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் ராமமோகன ராவ். அவரது மகன் வஸிஸ்தாவிற்கு சிந்து ஷர்மா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து ராமமோகன ராவ் தனது மருமகளிடம் வரதட்சணை கேட்டுள்ளார். தொடர்ந்து வரதட்சணை கேட்டு அவரது மருமகளை கொடுமை படுத்தியுள்ளார். கொடுமை படுத்தியது மட்டுமல்லாமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்.

இது குறித்து ராமமோகன ராவின் மருமகள் சிந்து ஷர்மா காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் வழக்குபதிவு செய்யப்பட்டு அது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராமமோகன ராவ் அவரது மருமகளை தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதி மருமகளை தாக்கும் சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details