பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று, மைதில் மொழி பேசும் அகதிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஜே.பி. நட்டாவுடன் துணைத் தலைவர் பிரபாத் ஜாவும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மைதில் மொழி பேசும் அகதிகளிடம் பாஜக வாக்கு சேகரிப்பு - மைதில் மொழி அகதிகள்
டெல்லி: மைதில் மொழி பேசும் வாக்காளர்களிடம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வாக்கு சேகரித்தார்.
JP Nadda reaches out to Maithil voters in Delhi
அப்போது பேசிய நட்டா, மைதில் மொழி பேசும் மக்கள் பாஜக கூட்டணிக்குப் பெருமளவு ஆதரவளித்து, டெல்லியில் பாஜக ஆட்சியமைக்க துணை நிற்க வேண்டும் என பரப்புரை செய்தார். டெல்லியில் 40 லட்சம் மைதில் மொழி பேசும் அகதிகள் உள்ளனர். இவர்கள் இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நேபாளம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இம்மக்கள் அதிகமாக வசிக்கின்றனர்.
இதையும் படிங்க: 2020 பாதுகாப்புக் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்