தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர்: ஷாநவாஸ் ஹுசைன் தகவல் - ஷாநவாஸ் ஹூசைன்

டெல்லி: பாஜகவின் புதிய தலைவராக ஜே.பி. நட்டா வருகிற 20ஆம் தேதி பதவியேற்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

BJP will  get new chief soon, says Shahnawaz Hussain
BJP will get new chief soon, says Shahnawaz Hussain

By

Published : Jan 15, 2020, 10:03 AM IST

பாரதிய ஜனதா கட்சியின் செயல்தலைவர் ஜே.பி. நட்டா விரைவில் கட்சியின் தேசிய தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக நமது ஈடிவி பாரத் பாஜக மூத்தத் தலைவர் ஷாநவாஸ் ஹுசைனிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஹுசைன், பாஜக தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதைச் சூசகமாகத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் பேசும்போது, ”அதற்கான நடைமுறைகள் நடந்துவருகிறது. அரசியல் கட்சிகளில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது நாங்கள் மட்டுமே ஜனநாயகத்தைப் பின்பற்றுகிறோம்” என்றார்.

பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர்: ஷாநவாஸ் ஹுசைன் தகவல்

டெல்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் நடக்கும் இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

59 வயதான ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர், பாஜகவின் கட்சித் தலைமைப் பொறுப்புகளை ஏற்கனவே வகித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவராக தர்மராஜ் தேர்வு

ABOUT THE AUTHOR

...view details