தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவின் செயல் தலைவராக ஜேபி நட்டா நியமனம்

டெல்லி:  பாஜகவின் செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜேபி நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

jb nada

By

Published : Jun 17, 2019, 11:49 PM IST

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதிலிருந்து, தலைவர் பதவிக்கு வேறு யாராவது நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், அமித் ஷாவே தொடர்ந்து அப்பதவியில் நீடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது பாஜகவின் செயல் தலைவராக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் ஜேபி நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். ஆறு மாத காலம் அப்பதவியில் நீடிக்கவுள்ள நட்டா, அமித்ஷாவின் பணியை பகிர்ந்துகொள்வார்.

2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சியைப் பிடித்தபோது, ஜேபி நட்டா அக்கட்சியின் தேசிய தலைவராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் உபியில் பாஜக வெற்றிக்குக் காரணமாக இருந்த அமித்ஷாவிற்கு அப்பதவி வழங்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details