கர்நாடக மாநில சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 10ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதனை ஒளிப்பரப்பு செய்ய அரசு ஊடகத்தை தவிர, மற்ற தனியார் ஊடகங்கள் ஒளிபரப்ப சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி மறுப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட ஊடகவியாளர்கள் ஒன்று திரண்டு பெங்களூருவில் உள்ள காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு முன்னாள் முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்தராமையா ஆதரவு தெரிவித்தார். அதேபோல் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியும் நேரில் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து இப்போக்கினை கண்டிக்கும் விதமாக விஜய கர்நாடகா என்னும் நாளேடு கருப்பு புகைப்படம் வெளியிடப்பட்டது.
ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செய்திகள் வெளியாக வேண்டும் என்று அரசு நினைப்பதால்தான், இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஒளிப்பரப்ப தனியார் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.