தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீனாவுடன் மோதல்: அந்தமான் நிகோபார் தீவுகளில் போர் பயிற்சி! - ANDAMAN & NICOBAR COMMAND

டெல்லி: சீன நாட்டுன் பதற்றம் நிலவிவரும் நிலையில், அந்தமான் நிகோபார் தீவுகளில் இந்திய ராணுவம் போர் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது.

போர் பயிற்சி
போர் பயிற்சி

By

Published : Nov 6, 2020, 4:38 AM IST

கல்வான் மோதலை தொடர்ந்து, இந்திய சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், அந்தமான் நிகோபார் தீவு கடற்கரையில் இந்திய ராணுவம் போர் பயற்சியில் ஈடுபட்டது. தெரசா தீவுக்குட்பட்ட கடற்பகுதியில் 'Bull Strike' என்ற பெயரில் போர் ஒத்திகை நடத்தப்பட்டது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ராணவ பாரசூட் படை, கடற்படை, சிறப்பு படை ஆகியவை கலந்து கொள்ளவுள்ளது.

எதிரிநாட்டு படைகளை முப்படைகளும் ஒன்றிணைந்து தாக்கி அழிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராணுவ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். விமானத்திலிருந்து பாரசூட்டை பயன்படுத்தி குதிப்பது போன்ற பயிற்சிகள் ராணுவ வீரர்களுக்கு இதில் வழங்கப்பட்டது.

போர் பயிற்சி

எதிரிநாட்டு படைகளை முப்படைகளும் ஒன்றிணைந்து தாக்கி அழிப்பது எப்படி என்பது குறித்த பயிற்சியும் இதில் அளிக்கப்பட்டுள்ளதாக ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர். நவம்பர் மூன்றாம் தேதி தொடங்கிய இப்பயிற்சி, நவம்பர் 5ஆம் தேதி முடிவடைந்தது.

போர் கப்பல்

ABOUT THE AUTHOR

...view details