பாரத ரிசர்வ் வங்கி, நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியாக இருந்துவருகிறது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட ரிசர்வ் வங்கியின் தலைமையகம் மும்பையில் செயல்பட்டுவருகிறது. ரிசர்வ் வங்கியில் 201 ‘பி’ கிரேடு காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது, பொருளாதார கொள்கை மற்றும் ஆராய்ச்சி, தகவல் மேலாண்மை துறை ஆகிய பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
பணி / காலியிடங்கள் விவரம்:
- பணி (பொது): உயர் அலுவலர்கள் Grade ‘B’(DR)- பொது | காலியிடங்கள்: 156
- பணி (பொருளாதார கொள்கை & ஆராய்ச்சி) : உயர் அலுவலர்கள் Grade ‘B’(DR)- DEPR | காலியிடங்கள்: 22
- பணி (தகவல் மேலாண்மைத் துறை) : உயர் அலுவலர்கள் Grade ‘B’(DR)- DSIM | காலியிடங்கள்: 23
கல்வித்ததகுதி:
பொதுப்பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 60 விழுக்காடு மதிப்பெண்களுடன், ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். DEPR, DSIM ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், துறைசார்ந்த பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.09.2019 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். எம்.ஃபில் (MPhil) முடித்தவர்களுக்கு உச்சபட்ச வயதுவரம்பில் 32, முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு உச்சபட்ச வயதுவரம்பு 34 ஆகும்.
எழுத்துத் தேர்வு:
இணைய வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இணைய எழுத்துத் தேர்வு தாள் 1, தாள் 2, தாள் 3 என மூன்று எழுத்துத்தேர்வுகளாக நடைபெறும்.