தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜேஎன்யு தாக்குதல் குறித்த வழக்கு: குற்றப்பிரிவுக்கு மாற்றம் - ஜே.என்.யு. தாக்குதல்

டெல்லி: ஜேஎன்யு தாக்குதல் குறித்த வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றி, உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

JNU
JNU

By

Published : Jan 6, 2020, 7:54 PM IST

புதிய பருவநிலைத் தேர்வுக்காக ஜேஎன்யு மாணவர்கள் தங்களது விவரங்களைப் பல்கலைக்கழக இணைதளத்தில் பதிவிடுவதைத் தடுக்கும் விதமாக, ஜனவரி 3ஆம் தேதி குறிப்பிட்ட சில மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இணையதள மையத்துக்குள் புகுந்து வைஃபை கருவியைச் செயலிழக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அவர்களுக்கும், இன்னொரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின் அது கை கலப்பில் முடிந்துள்ளது. வைஃபை கருவிகளைச் செயலிழக்கச் செய்த மாணவர்கள் சிசிடிவி கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வைஃபை இல்லாமல் போனதால் பெரும்பாலான மாணவர்கள் பருவநிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று அமைதிப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

அப்போது, திடீரென அங்கு வந்த முகமூடி கும்பல் ஒன்று இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையால் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. இத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், மாணவர்கள் விடுதிகள், வரவேற்பு அறைகள், வாகனங்கள் ஆகியவற்றையும் அந்தக் கும்பல் அடித்து உடைத்தது.

இதில், ஜேஎன்யு மாணவ சங்கத் தலைவி அய்ஷி கோஷ், மாணவர்கள், பேராசிரியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்த வழக்கை டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றி, உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனிடையே, பல்கலைக்கழக பதிவாளர், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் டெல்லி துணை நிலை ஆளுநரைச் சந்தித்து கல்லூரியில் நிலவும் சூழல் குறித்து விளக்கமளித்துள்ளனர்.

இதையும் படிங்க: சபரிமலை வழக்கு: ஜனவரி 13ஆம் தேதி முதல் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details