ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர்கள் அணியான ஏபிவிபிக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நிகழ்ந்த மோதல் சம்பவத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷே கோஷ் உள்ளிட்ட பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்து அய்ஷே கோஷ் கூறுகையில், "முகமூடி அணிந்திருந்த சிலர் என்னை கொடூரமாக தாக்கினர். எனக்கு ரத்தம் வழியும் அளவு கொடூரமாக தாக்கியுள்ளனர்" என்றார்.