தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜே.என்.யு. மாணவரை ஏபிவிபி மாணவர்கள் தாக்கினரா? - ஜே.என்.யு. மாணவரை தாக்கிய ஏபிவிபி மாணவர்கள்

டெல்லி: ஜே.என்.யு. மாணவர் சில நபர்களால் விடுதியில் தாக்கப்பட்டார். அந்நபர்கள் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் என சந்தேகிப்பதாக தாக்கப்பட்டவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

JNU student thrashed at Narmada hostel; relative points finger at ABVP
JNU student thrashed at Narmada hostel; relative points finger at ABVP

By

Published : Jan 21, 2020, 12:11 PM IST

ஜே.என்.யு. மாணவர் ரஜிப் இக்ரம் என்பவர் நர்மதா விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில், திடீரென அவரது அறைக்குள் நுழைந்த மூன்று பேர் இக்ரமை சரமாரியாகத் தாக்கிவிட்டு, அங்கிருந்து சென்றுள்ளனர். பின்னர் அங்கு வந்த தாக்கப்பட்ட மாணவரின் சகோதரர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

முதல்கட்ட தகவல் அடிப்படையில், நர்மதா விடுதியில் ரஹிப் இக்ரம் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்ததாகவும் ஜே.என்.யு.விலுள்ள மற்றொரு விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை அந்த விருந்துக்கு அனுமதிக்காததால் அம்மாணவர்கள் இக்ரமை தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

இக்ரமின் சகோதரர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”என் சகோதரனை இஸ்லாமியர் என்பதால் அடித்துள்ளார்கள். தாக்குதல் நடத்தியவர்களின் அறையில் இந்து அமைப்பான ஏபிவிபி (ABVP) குறித்த போஸ்டர் இருந்ததாக என் சகோதரனின் நண்பர் கூறியுள்ளார். நிச்சயம் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் இக்ரமை தாக்கியிருக்கக்கூடும்” என்றார்.

இதையும் படிங்க: 'உயிர்களை அழிக்கும் பாஜக நிர்வாகம்' - சீதாராம் யெச்சூரி சாடல்

ABOUT THE AUTHOR

...view details