டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, கட்டண உயர்வை திரும்பப் பெறுதல், பருவநிலை தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் உள்ளிட்ட இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஜே.என்.யு. வன்முறைச் சம்பவம் - விசாரிக்க 5 பேர் கொண்ட குழு நியமனம் - ஜேஎன்யூ முகமுடி கும்பல் வன்முறை
டெல்லி: ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறைச் சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஐந்து பேர் கொண்ட குழுவை அப்பல்கலைக்கழக நிர்வாகம் நியமித்துள்ளது.
அப்போது, அங்கு வந்த முகமூடி கும்பல் இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டை ஆகியவற்றைக் கொண்டு அங்கிருந்த மாணவர்கள், பேராசிரியர்களை சரமாரியாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலில், மாணவர் சங்கத் தலைவி ஆயிஷே கோஷ் உள்ளிட்ட பல மாணவர்களும், ஆசிரியர்களும் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் நாடெங்கிலும் உள்ள மாணவர் சமூகத்தினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ஐந்து பேர் கொண்டு விசாரணைக் குழுவை அப்பல்கலைக்கழக நிர்வாகம் நியமித்துள்ளது.