தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எம்.பில், பி.ஹெச்.டி., ஆய்வறிக்கைகளை ஆன்லைனில் சமர்பிக்க ஒப்புதல் அளித்தது ஜேன்என்யூ! - ஜேன்யூ பல்கலை எம்பில் படிப்பு

டெல்லி: எம்.டெக், எம்.பில், பி.ஹெச்.டி., ஆகிய படிப்புகளுக்கான ஆய்வறிக்கைகளை ஆன்லைனில் சமர்பிக்கும் திட்டத்திற்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நேற்று (ஜூலை 23) ஒப்புதல் அளித்துள்ளது.

JNU
JNU

By

Published : Jul 24, 2020, 5:03 PM IST

எம்.டெக், எம்.பில், பி.ஹெச்.டி., ஆகிய படிப்புகளுக்கான ஆன்லைன் சமர்பிப்பது தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிந்தாமணி மகாபத்ரா அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்தார். இதற்கு பல்கலைக்கழகத்தின் 286ஆவது செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தியாவில் ஆய்வுக் கட்டுரை மற்றும் ஆய்வறிக்கைகளை டிஜிட்டலில் சமர்ப்பிக்கும் இந்தப் புதிய செயல்முறையினை தொடங்குவதில் ஜேஎன்யூ முன்னிலை வகிக்கும். இது எம்.பில்., எம்.டெக்., பி.ஹெச்.டி., ஆகியவற்றின் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆய்வறிக்கைகளை ஆன்லைனில் சமர்ப்பிக்கும் திட்டம். மாணவர்கள் சரியான நேரத்தில் ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியும். ஏற்கனவே ஜேஎன்யூ ஆய்வறிக்கைகளைக் கண்காணிக்கும் அமைப்பினை உருவாக்கியுள்ளது. கரோனா நெருக்கடி காரணமாக சுமார் 150-க்கும் மேற்பட்டோருக்கு முனைவர் பட்டங்களுக்கான வாய்மொழித் தேர்வு ஆன்லைனில் நடைபெற்றது.

இந்த ஆன்லைன் தேர்வில், கல்லூரியில் எவ்வித நிலுவைத் தொகையும் இல்லையென்ற ’நோ டியூ பார்ம்’ சமர்ப்பிப்பு கட்டாயம். இதற்கென புதிய செயல்முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன; மாணவர்கள் இதற்கென தனியாக அலைய வேண்டிய அவசியமில்லை. இதைப் போலவே சமர்ப்பிக்கப்படும் ஆய்வறிக்கையின் கருத்து திருட்டு உள்ளிட்டவற்றிற்கும் ஆன்லைனில் பணம் செலுத்திக் கொள்ளலாம்.

இது குறித்து ஜேஎன்யூ துணை வேந்தர் ஜெகதீஷ் குமார் கூறுகையில்,” உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக ஜேஎன்யூ மாற வேண்டுமானால், ஒரு நல்ல ஆராய்ச்சி உள்கட்டமைப்பை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், திறமையான நிர்வாக மற்றும் கல்வி நடைமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பின்பற்றுவதன் மூலம், ஜேஎன்யூ பல நடைமுறைகளை நெறிப்படுத்தியுள்ளது. இது போன்ற சீர்திருத்தங்கள் மேலும் நடைபெற்று வருகின்றன” என்றார்.

இதையும் படிங்க:கரோனா பாதிப்பு: எம்.பில், பிஹெச்.டி முடிக்க கால நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details