ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேரழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் தலைமைச் செயலர் சுக்தேவ் சிங் பிறப்பித்துள்ள உத்தரவின் படி, ”கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வரும் செப்டம்பர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மாநிலத்தில் பார், கல்வி நிறுவனங்கள், சினிமா, கலாச்சார, சமூக, விளையாட்டு நிகழ்வு, கலையரங்கங்கள், நீச்சல் குளங்கள், ஜிம்கள், பள்ளி, கல்லூரிகள், பயிற்சி, பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தியோகரில் பாபா பைத்யநாத் தாம், தும்காவில் உள்ள பசுகிநாத் கோயில் தவிர அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.