ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் கடந்த 20 நாட்களில் மட்டும் பத்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல் ஆணையர் தில்பாக் சின் கூறுகையில், ' பொதுமக்கள் உயிருக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் பயங்கரவாதிகளை வெற்றிகரமாக ஒழித்துள்ளோம். ஜனவரி மாதம் இதுவரை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பத்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் ' எனத் தெரிவித்துள்ளார்.