ஜம்மு & காஷ்மீர்: லால்போரா கிராமத்தில் துப்பாக்கிச் சூடு! - ஆயுதம் ஏந்திய போராளிகள்
லால்போரா கிராமத்தில் ஆயுதம் ஏந்திய போராளிக் குழுக்களும் ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
encounter breaks out in Lalpora village
ஸ்ரீநகர்: லால்போரா கிராமத்தில் ஆயுதம் ஏந்திய போராளிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ராணுவத்தினர் அப்பகுதியில் சூழ்ந்தனர். ராணுவத்தினர் நெருங்குவதை அறிந்த ஆயுதம் ஏந்திய போராளிகள், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். பதிலுக்கு ராணுவத்தினரும் தாக்கத் தொடங்கினர். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. அப்பகுதி பதற்றத்துடன் காணப்படுகிறது.