கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீரின் சிறப்புத் தகுதி சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறிப்பாக, அம்மாநிலத்தின் தொலைத் தொடர்பு சேவை, இணைய சேவை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 17ஆம் தேதி சில இடங்களில் மீண்டும் தொலைத் தொடர்பு சேவை வழங்கப்பட்டது. பின்னர், ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் வெடித்ததால் மீண்டும் சேவை துண்டிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 29ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் சில மாவட்டங்களில் மட்டும் செல்ஃபோன் சேவை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எஞ்சிய பகுதிகளுக்கு இன்று மதியம் 12 மணி முதல் இணைய சேவையும் செல்ஃபோன் சேவையும் அளிக்கப்படும் என்று கடந்த 12ஆம் தேதி காஷ்மீரின் முதன்மைச் செயலர் ரோஹித் கன்சல் தெரிவித்திருந்தார்.