ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் அம்மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுவந்துள்ளனர். அப்போது, மோசின் மன்சூர் என்பவர் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கைது! - Kashmir News
ஸ்ரீநகர்: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பச் சேர்ந்த பயங்கரவாதியான மோசின் மன்சூர், ஜம்மு-காஷ்மீரில் கைது செய்யப்பட்டார்.
பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஒரு புது அணியை உருவாக்கியது. அந்த அணியில் மோசின் மன்சூர் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கடந்த மாதம் நடந்த என்கவுன்ட்டரில் இந்த அணியைச் சேர்ந்த மற்றொரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். இதன்மூலம், தாக்குதல் நடத்த உருவாக்கப்பட்ட அணி மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாத தடுப்பு நடிவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பதற்றம் நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.