தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீர்: பெண்களுக்கென பிங்க் வாகனம்! - ஜம்மு-காஷ்மீர் செய்திகள்

ராஜவுரி: உலக பெண் குழந்தைகள் தினத்தின் நினைவாகப் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் ஆறு பிங்க் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிங்க் வாகனம்

By

Published : Oct 12, 2019, 12:27 PM IST

பெண்களுக்கென பிரத்யேகமாக, பிங்க் வண்ணத்திலான ஆறு ‘மஹிந்திரா சுப்ரோ’ சிறிய ரக வாகனங்களை, மாவட்ட மேம்பாட்டு ஆணையர் முகமது ஐஜாஸ் அசாத் அறிமுகப்படுத்தினார். நேற்றைய நிகழ்வான, உலக பெண் குழந்தைகள் தினத்தின் நினைவாக இந்த பிங்க் வாகனத்தை அறிமுகப்படுத்தியதாக மாவட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்கள், மாணவிகள் ஆகியோர் பயன்பெறும் வகையிலும், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும், இந்த வாகனம் செயல்படும் என அசாத் கூறியுள்ளார். மேலும், 8 இருக்கைகள் கொண்ட இந்த வாகனமானது, முக்கிய பேருந்து நிலையங்களிலிருந்து, காலை 8 மணி முதல், இரவு 8:30 மணி வரை சாலைகளில் சேவை புரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details