ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு தங்களது மக்களை புறக்கணித்து வந்தது என்று குற்றஞ்சாட்டிய அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் 12 பேர் பாஜக மாவட்ட செயலாளர் ராம்பன் முகமது சலீம் முன்னிலையில் இன்று (செப்டம்பர் 12) அக்கட்சியில் இணைந்தனர்.
பாஜகவில் இணைந்த காஷ்மீர் சமூக செயற்பாட்டாளர்கள்! - பாஜகவில் இணைந்த காஷ்மீர் மக்கள்
ஜம்மு: ராம்பன் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் 12 பேர் பாஜக மாவட்ட செயலாளர் ராம்பன் முகமது சலீம் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
jk-over-a-dozen-activists-from-banihal-join-bjp
இது தொடர்பாக பேசிய முகமது சலீம், "சமூக செயற்பாட்டாளர்கள் பாஜகவில் இணைவது கட்சியை பலப்படுத்தும். பாஜகவின் பிரதிநிதியாக பொது மக்களின் நலனுக்காக அவர்கள் முழு மனதுடன் சேவைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சமூக செயற்பாட்டாளர்கள், "இப்பகுதியில் சாலைகள், மின்சாரம், நீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, இப்பகுதியில் உள்ள மக்கள் பாஜகவுடன் கைகோர்த்து கட்டுமானம் மற்றும் மேம்பாட்டை சீரமைக்கவுள்ளோம்" என்றனர்.