தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆட்சிப்பணியாளர் மீது பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற்ற ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்! - காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் நிர்வாகம், முன்னாள் ஆட்சிப் பணியாளர் ஷா ஃபைசல் மீது பதியப்பட்டிருந்த வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளது.

PSA Shah Faesal PDP J&K autonomy Sartaj Madani JK revokes PSA against Shah Faesal JK admn revokes PSA against PDP leaders Public Safety Act பொது பாதுகாப்புச் சட்டம் ஷா ஃபைசல் காஷ்மீர் ஷா ஃபைசல் தடுப்புக்காவல்
ஷா ஃபைசல்

By

Published : Jun 4, 2020, 3:25 PM IST

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதற்கு பின்பு, முன்னாள் ஆட்சிப் பணியாளரும், இந்நாள் அரசியல் கட்சித் தலைவருமான ஷா ஃபைசல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்தாண்டு பிப்ரவரி மாதம் அவரின் தடுப்புக் காவல் முடிந்த தருவாயில், அவர் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் கடந்த மே14ஆம் தேதி அவரின் தடுப்புக் காவல் மூன்று மாதம் நீட்டிக்கப்பட்டது.

மேலும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் இரு தலைவர்களான சர்தாஜ் மடானி, பீர் மன்சுர் ஆகியோர் மீது பதியப்பட்டிருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதாக உள் துறை அறிவித்துள்ளது.

அதேசமயம் கடந்த மே 5ஆம் தேதி தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த மடானியின் தடுப்புக் காவல் மூன்று மாதம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details