புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3500க்கும் மேற்பட்ட செவிலியர்கள், 1000க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், பேராசிரியர்களும் பணியாற்றிவருகின்றனர்.
ஜிப்மரில் ஓபிசி ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் ! - obc workers
புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரியும் ஓபிசி பணியாளர்களின் பணியினை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஜிப்மரில் ஓபிசி ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் !
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும்,
ஓபிசி பணியாளர்களுக்கான பணி மறு கட்டமைப்பினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜிப்மர் ஓபிசி நலச்சங்க கௌரவத் தலைவர் தலைமையில் ஓபிசி பணியாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் மதி, நளினி, தாமரைச்செல்வன், வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.