தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் ஐந்தில் ஒருவருக்கு கரோனா- ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி - புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரியில் ஐந்தில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என்று ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிப்மர்
ஜிப்மர்

By

Published : Sep 24, 2020, 9:04 PM IST

புதுச்சேரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. புதுச்சேரியில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் கரோனா தொற்றால் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 500-ஐ தொட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கரோனா தொடர்பாக இரண்டு முறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக சுமார் ஆயிரத்து 800 பேர் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில், ”புதுச்சேரியில் ஐந்து பேரில் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி புதுச்சேரி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details