தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இளம் மருத்துவர்களால் வேதனையடைந்த வினோத் குமார் பால்! - jipmer convocation

புதுச்சேரி: மருத்துவம் முடித்த மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிவதிலேயே ஆர்வம் காட்டுவதாக, நிதி ஆயோக் குழுவின் உறுப்பினர் வினோத் குமார் பால் வருத்தம் தெரிவித்தார்.

vinothkumar pal

By

Published : Aug 25, 2019, 7:17 PM IST

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 10ஆவது பட்டமளிப்பு விழா அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்றது. இதில், நிதி ஆயோக் குழுவின் உறுப்பினர் வினோத் குமார் பால், சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் பிஎச்டி, எம்சிஎச், எம்டி, எம்எஸ், எம்பிபிஎஸ் என மொத்தம் 450 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பு தகுதிகள் பெற்ற 90 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வினோத்குமார், நாட்டில் சிறப்பு மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். படித்து முடித்த மருத்துவர்கள், தனியார் மருத்துவமனையில் பணிபுரிவதிலேயே அதிக ஆர்வம் காட்டுவது வருத்தம் அளிக்கிறது, என்றார். மேலும், ஏழை நோயாளிகளை கணிவுடன் அணுகவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

ABOUT THE AUTHOR

...view details