தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

செப்டம்பர் 5 முதல் ஜியோ ஃபைபர் சேவை அறிமுகம்: முகேஷ் அம்பானி

மும்பை: இந்தியா முழுவதும் செப்டம்பர் 5 முதல் ஜியோ ஃபைபர் சேவை தொடங்கவுள்ளது என ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

ஜியோ ஃபைபர்

By

Published : Aug 12, 2019, 1:50 PM IST

Updated : Aug 12, 2019, 4:46 PM IST

ரிலையன்ஸ் 44ஆவது வருடாந்திர பொதுக்கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீட்டா அம்பானி, மூத்த மகனும் ஜியோ நிறுவன வியூகத் தலைவருமான ஆகாஷ் அம்பானி, மகள் ஈஷா அம்பானி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, 1 GBps அதிவேக இணையதள சேவைதரும் 'ஜியோ ஜிகா ஃபைபர் சேவை' வணிக ரீதியாக இந்தியா முழுவதும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவித்தார். இந்த சேவைக்கு மாதம் ரூ. 700 முதல் 10,OOO வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜியோ ஃபைபர்

இந்தச் சேவையோடு லேண்ட் லைன் இணைப்பு, டிஜிட்டல் செட்-ஆப் பாக்ஸ், வாய்ஸ் அசிஸ்டன்ஸ் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

ஜியோ டிவி, ஜியோ 3 செல்ஃபோன், ஜியோ வி.ஆர். கருவி போன்றவைகளும் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.

Last Updated : Aug 12, 2019, 4:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details