இது குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 36.9 கோடி சந்தாதாரர்களைக் கொண்டுசெயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் அதிக சந்தாதாரர்கள் கொண்டு தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது. அதேவேளையில், வோடபோன் ஐடியா நிறுவனம் 33.69 கோடியுடனும், பாரதி ஏர்டெல் 32.73 கோடியுடனும் முறையே 2, 3ஆம் இடங்களில் உள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வோடபோன் ஐடியா நிறுவனங்கள் சந்தாதாரர்களை இழந்துவரும் சூழல் ரிலையன்ஸ் ஜியோவுக்கு சாதகமாக அமைந்துவிட்டதென இந்த்-ரா என்னும் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 2019-20 இரண்டாம் காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருமானம் 34.9 விழுக்காடு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கும் இந்த்-ரா, இந்த எழுச்சி தொலைத்தொடர்புத் துறையில் முதன்முறை எனக் கூறியுள்ளது.
இதையும் படிங்க : வங்கதேச துறைமுகங்களை வடகிழக்கு மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்: மக்மூத் ஹாசன் பிரத்யேக பேட்டி