தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஹேப்பி நியூ இயர்': ஜியோவின் புத்தாண்டு ஆஃபர் மழை! - ஜியோவின் புத்தாண்டு ஆஃபர் மழை

2020 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் அடுத்த ஆண்டு (2020) முழுவதும் வரம்பற்ற (அன்லிமிடெட்) சேவை வழங்கப்படும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

jio 2020 happy New year Offer, , 2020 ஹேப்பி நியூ இயர் ஆஃபர்
jio 2020 happy New year offer

By

Published : Dec 23, 2019, 10:03 PM IST

அவ்வப்போது அதிரடி ஆஃபர்கள் அள்ளித் தெளித்து வாடிக்கையாளர்களைத் திணறடித்துவரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 2020 புத்தாண்டை முன்னிட்டு 'ஹேப்பி நியூ இயர் ஆஃபர்' என்ற சலுகையை அறிவித்துள்ளது.

2020-க்கு 2020!

இந்தச் சலுகை மூலம், 2020 ரூபாய் கொடுத்து ரீசார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளர், அடுத்த ஆண்டு (2020) முழுவதும் வரம்பற்ற டேட்டா (ஒருநாளைக்கு 1.5 ஜிபி), வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன் இல்லையா! கவலை வேண்டாம். இதற்கும் ஜியோவிடம் சலுகை உள்ளது. அது என்னவென்றால் 2020 ரூபாயை கொடுத்து ஜியோ ஃபோன் வாங்கினால் வரம்பற்ற வாய்ஸ், எஸ்எம்எஸ் சேவைகள் (இவையும் ஆண்டு முழுவதும்) வழங்கப்படும்.

மேலும், ஒருநாளைக்கு 0.5 ஜிபி வீதம் டேட்டா சேவையும் வழங்கப்படும். இந்தச் சலுகை நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.

இதையும் படிங்க : ஏர்டெல் வைஃபை காலிங் சேவையை நீங்களும் பயன்படுத்தலாம் !

ABOUT THE AUTHOR

...view details