தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவை தொடரும் ஜார்க்கண்ட்! என்னவா இருக்கும்? - ஜார்க்கண்ட் அரசு

டெல்லி: மாநில அரசின் அனுமதி இல்லாமல் விசாரணை மேற்கொள்ளும் சிபிஐயின் அதிகாரத்தை ஜார்க்கண்ட் அரசு திரும்பப்பெற்றுள்ளது.

ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட்

By

Published : Nov 6, 2020, 5:13 AM IST

மாநிலத்தில் சோதனைகள், விசாரணையை மேற்கொள்ள சிபிஐக்கு அளித்துவந்த அனுமதியை ஜார்க்கண்ட் அரசு திரும்பப்பெற்றுள்ளது. இதன்மூலம், ஒவ்வொரு வழக்கிலும் விசாரணையை மேற்கொள்ள மாநில அரசின் அனுமதி கட்டாயமாகியுள்ளது. பொதுவாக, டெல்லியில் மட்டுமே மாநில அரசின் அனுமதி இல்லாமல் விசாரணையை மேற்கொள்ள சிபிஐக்கு அதிகாரம் உள்ளது. மற்ற மாநிலங்களில் மாநில அரசின் அனுமதியை பெற்றே சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கேரளாவை தொடரும் ஜார்க்கண்ட்

பொதுவாக, ஒரு குறிப்பிட்ட காலம் வரை, விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு பொது ஒப்புதல் வழங்கப்படும். தற்போது, அது திரும்பப்பெறப்பட்டுள்ளது. முன்னதாக, மேற்குவங்கம், ஆந்திரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்கள் சிபிஐக்கு வழங்கிய அனுமதியை திரும்பப்பெற்றன.

ABOUT THE AUTHOR

...view details