ஜார்க்கண்ட் மாநிலம், போகரோ (bokaro) பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
ரூ. 1.6 கோடி மதிப்புள்ள அரியவகை பாம்பு பறிமுதல்! - ரெட்சான்போ
ராஞ்சி: ரூ.1.6 கோடி மதிப்புள்ள அரியவகை பாம்பினத்தை கடத்திய இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அரிவகை பாம்பினமான ரெட் சான்போ இருப்பது தெரியவந்தது. மருந்திற்காக கடத்தப்படும் அந்தப் பாம்பின் சந்தை விலை ரூ.1.06 கோடியாகும். அவற்றை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட சுனில் பஸ்வான், சஹாபுதீன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்து வனத் துறை அலுவலர் சுரேந்திர பாகத் கூறுகையில், இந்த வகை பாம்புகள் பெரும்பாலும் மகாராஷ்டிராவில் இருந்து நேபாளம் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக சீனாவிற்கு அதிகளவில் இந்த வகை பாம்புகள் கடத்தப்படுகின்றன. உலக சந்தையில் அதிக சந்தை மதிப்புள்ள பொருட்களில் இந்த பாம்பும் ஒன்றாகும்.