ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஆறு மாவட்டங்களில் 13 தொகுதிகளுக்கு இன்று காலை தொடங்கியது.
அம்மாநிலத்தில் ஜனநாயகத்தை வளப்படுத்தும் வகையில், அதிக அளவில் மக்கள் வந்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுகொண்டுள்ளார். இதன்படி காலை 11 மணி நிலவரப்படி 13 தொகுதிகளில் 27.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் ட்வீட் கும்லா தொகுதியில் வாக்காளர்களை அச்சுறுத்தும் நோக்கில் நக்ஸலைட்கள் தாக்குதலை நடத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பிற்கு காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
முதல் கட்ட வாக்குப்பதில் 37 லட்சத்து 83 ஆயிரத்து 55 பேர் வாக்காளர்கள் உள்ளனர். அதில் 19 லட்சத்து 81 ஆயிரத்து 704 ஆண்களும், 18 லட்சத்து ஆயிரத்து 356 பெண்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய முதல்கட்ட வாக்குப்பதிவின் இறுதி நிலவரப்படி 62.87 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: ஜார்க்கண்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!