தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.200 திருடியதாகச் சிறுமிக்கு சூடு: அரசு அலுவலர் மீது வழக்குப்பதிவு - ரூ.200 திருடியதாக குற்றச்சாட்டு

ராஞ்சி: ஹசாரிபார்க் பகுதியில் ரூ.200 திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சிறுமி ஒருவரை அரசு அலுவலர் சூடேற்றப்பட்ட இரும்புக் கம்பியைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி

By

Published : Oct 3, 2019, 9:10 AM IST

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ்குமார். அரசு அலுவலரான இவரது வீட்டில் சிறுமி ஒருவர் வீட்டு வேலை செய்துவந்துள்ளார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு அவரது வீட்டில் ரூ.200 பணம் காணாமல் போயுள்ளது.

பணம் திருட்டு தொடர்பாக ராகேஷ்குமார் சிறுமியிடம் விசாரித்துள்ளார். அதற்கு சிறுமி மறுப்புத் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அவர் இரும்புக் கம்பியை சூடேற்றி முகம், மார்பு பகுதியில் சூடுபோட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தலைமுடியையும் பிடிங்கி சித்ரவதை செய்துள்ளார்.

இந்தக் கொடுமைகளை தாங்க முடியாத சிறுமி மயக்கமடைந்ததால் அதிர்ச்சியடைந்த ராகேஷ் குமாரின் மனைவி சிறுமியை வீட்டின் பின்புறமாகத் தூக்கி வீசியுள்ளார். காலி நிலத்தில சுயநினைவை இழந்து கிடந்த சிறுமியின் நிலையை பார்த்து, அக்கம் பக்கத்தினர் அவரது பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த சிறுமியின் பெற்றோர், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் உள்ள சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. பின்னர் இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இந்நிலையில் புகாரைத் திரும்பப் பெற்றால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக ராகேஷ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதை சிறுமியின் பெற்றோர் வாங்க மறுத்துள்ளனர். தங்களது மகளுக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: 15 வயது சிறுமியை தாயாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

ABOUT THE AUTHOR

...view details