மூத்த காங்கிரஸ் தலைவரும், ஜார்க்கண்ட் மாநில நிதி அமைச்சருமான ராமேஸ்வர் ஒரௌன் ஆளும் பாஜக அரசு காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை பிரிக்க முயற்சி செய்வதாகத் தெரிவித்தார். இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள பாஜக அரசு, முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக காங்கிரஸ் தீட்டும் திட்டம்தான் இது என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராமேஸ்வர் கூறுகையில், அண்மையில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை வாங்க பாஜக முயன்றதாகத் தெரிவித்தார். காங்கிரஸ் எம்எல்ஏக்களைக் கவர பாஜக தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
"எங்களது எம்எல்ஏக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். மற்ற கட்சிக்குத் தாவமாட்டார்கள். மாநிலங்களவை தேர்தலின்போது, பணத்தையும் பதவிகளையும் தங்களது எம்எல்ஏக்களுக்கு வழங்கி, வெல்ல பாஜக திட்டமிட்டது" எனவும் ராமேஸ்வர் தெரிவித்தார்.
ராமேஸ்வரின் குற்றச்சாட்டை ஆதரிக்கும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏ இர்ஃபான் அன்சாரி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "பொய்கள், முகப் புகழ்ச்சிகொண்ட ஆற்றை நான் கடந்து வந்திருப்பேன். ஆனால், உண்மையை சொல்லும் எனது பழக்கம் என்னை மூழ்க செய்துவிட்டது" என்று குறிப்பிட்டிருந்தார்.