ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்துவருகிறது. ரகுபர் தாஸ் முதலமைச்சராக உள்ளார். இவர் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் களம் காண்கிறார். இந்தத் தொகுதி பாஜகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது.
ஆகவே இங்க நின்றால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நோக்கத்தில் ரகுபர் தாஸ் இந்தத் தொகுதியை தேர்ந்தெடுத்தார். அவருக்கு எதிர்ப்பு உள்கட்சியிலேயே கிளம்பியுள்ளது.
அவரை எதிர்த்து சர்யு ராய் களம் காண்கிறார். இவர் அப்பகுதியில் பாஜகவின் தீவிர முகமாகப் பார்க்கப்படுபவர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சர்யு, ரகுபர் தாசை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.