தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுய தனிமைப்படுத்தலில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் - Jharkhand CM, ministers home quarantine

ராஞ்சி: ஜார்க்கண்டின் சுகாதார அமைச்சர் பன்னா குப்தாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பிற அமைச்சர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

jharkhand-cm-ministers-go-into-self-quarantine-after-health-minister-tests-positive-for-covid-19
jharkhand-cm-ministers-go-into-self-quarantine-after-health-minister-tests-positive-for-covid-19

By

Published : Aug 20, 2020, 1:31 AM IST

இது குறித்து முதலமைச்சரின் செயலர் அளித்த தகவல்களின்படி, சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா நேற்று (ஆகஸ்ட் 19) கரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் உள்ளிட்ட ஏழு அமைச்சர்கள் சுய தனிமைப்படுத்திக் கொண்டனர்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் குப்தா கலந்து கொண்டார். ஜூலை மாதம் மாநில நீர்வளத்துறை அமைச்சர் மிதிலேஷ் தாக்கூருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டாவதாக சுகாதார அமைச்சர் பன்னாவுக்கு (50) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details