நாடு முழுவதும் கரோனா ரைவசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. ஜார்கண்ட் அமைச்சர், மிதிலேஷ் தாகூருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அமைச்சருக்கு கரோனா... தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட முதலமைச்சர் - குடிநீர் மற்றும் தூய்மைத் துறை அமைச்சர்
ராஞ்சி: அமைச்சர் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக சமீபத்தில் அவருடன் தொடர்பிலிருந்த முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அலுவலக ஊழியர்கள் ஆகிய அனைவரும் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் மிதிலேஷ் தாகூர், எம்எல்ஏ மதுரா மகாடோ ஆகியோர் விரைவாகக் குணமடைய பிரார்த்திப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
ஹேமந்த் சோரனுக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை மூன்றாயிரத்து 18 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 22 பேர் உயிரிழந்துள்ளனர்.