தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜார்க்கண்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

ராஞ்சி: ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஆறு மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இன்று தொடங்கியது.

ஜார்க்கண்டில்  வாக்குப்பதிவு, jharkhand first-phase-of-voting
Jharkhand Assembly Polls

By

Published : Nov 30, 2019, 8:53 AM IST

Updated : Nov 30, 2019, 12:42 PM IST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்று தொடங்கி வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை ஐந்து கட்டங்களகாக நடைபெறவுள்ளது. அதற்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியயுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 3 மணிவரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் சத்ரா, கும்லா, பிஷூன்பூர், லொஹர்தகா, மணிக்கா, லத்திஹர், பண்கி, தல்தோன்கஞ், பிஷ்ராம்பூர், சாட்டர்பூர், ஹூஸைன்னாபாத், கர்வா, பவனத்பூர் ஆகிய தொகுதிகளில் 15 பெண்கள் உட்பட 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அந்த தொகுதிகளில் மொத்தம் 37 லட்ச மக்கள் இந்த முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்கவுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் வினய் குமார் சௌபே தெரிவித்துள்ளார்.

பாஜக, காங்கிரஸ் தவிர ராஷ்ட்ரீய ஜனதா தள், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட மாநில கட்சிகள் போட்டியிடுகின்றன.

ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்த பிறகு வரும் டிசம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 2000ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் இருந்து ஜார்க்காண்ட் பிரிந்த பிறகு சந்திக்கும் நான்காவது சட்டப்பேரவை தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: எரிக்கப்பட்ட மற்றொரு பெண்ணின் பிரேதம்: தெலங்கானாவில் சைக்கோ கொலைகாரர்களா?

Last Updated : Nov 30, 2019, 12:42 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details