தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜெய்பால் ரெட்டி ஒரு சிறந்த நிர்வாகி - பிரதமர் மோடி புகழாரம் - Jaypal Reddy

டெல்லி: சிறந்த நிர்வாக திறனும், தெளிவான பேச்சாற்றலும் கொண்ட ஜெய்பால் ரெட்டியின் மறைவு செய்தியைக் கேட்டு தான் வருந்துவதாக பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Jaipal Reddy

By

Published : Jul 28, 2019, 9:41 PM IST


காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்பால்ரெட்டி இன்று உடல் நலக்குறைவால் காலமானார். தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, நகர்புற வளர்ச்சி, பெட்ரோலிய துறை என பல முக்கிய துறைகளில் அமைச்சராக பதவி வகித்தவர் ஜெய்பால் ரெட்டி ஆவார். இவரது மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.அதில்,

பிரதமர் மோடி

பொது வாழ்க்கையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் ஜெய்பால் ரெட்டி. அவர் தெளிவான பேச்சாற்றலையும், சிறந்த நிர்வாக திறனையும் கொண்டவர். அவர் மறைவு செய்தி எனக்கு வருத்தம் அளிக்கிறது.

மோடி இரங்கல் செய்தி

குடியரசு துணைதலைவர் வெங்கையா நாயுடு

ஜெய்பால் ரெட்டி ஒரு சிறந்த பேச்சாளர். மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி என்ற விருதை 1998ஆம் ஆண்டு பெற்றார். அவரின் மறைவுக்கு நான் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் செய்தி

ராகுல் காந்தி

ஜெய்பால் ரெட்டியின் மறைவு செய்தியைக் கேட்டு வருந்துகிறேன். சிறந்த நாடாளுமன்றவாதி. தெலங்கானாவின் சிறந்த மகன். தனது முழு வாழ்க்கையையும் பொது வாழ்க்கைக்காக அர்ப்பணித்தவர்.

ராகுல் காந்தி இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details