ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் சுமார் எட்டு ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகிறது. இதன் காரணமாக அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் தங்களது பதவியிலிருந்து விலகிக் கொண்டனர்.
ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்
மும்பை: கடும் கடன் நெருக்கடியால் முடங்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நரேஷ் கோயலும், அவரது மனைவியும் முன்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
naresh goyal
இந்நிலையில், நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதாவும் துபாய் செல்வதற்காக நேற்று மும்பை விமான நிலையம் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சுங்கத் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதாக பிடிஐ செய்து நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் இருவர் மீதும் லுக் ஆவுட் நோட்டீஸ் இருப்பதாக அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெட் ஏர்வேஸ் நெருக்கடி குறித்து தீவிர மோசடி புலனாய்வு அலுவலகமும், அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.