ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. இந்நிலையில், ஏப்ரல் 17ஆம் தேதி தன் பெரும்பான்மையான சேவைகளை அந்நிறுவனம் நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து இன்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் வினய் துபே பதிவி விலகியுள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் பதவி விலகினார் - ஜெட் ஏர்வேஸ்
டெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் வினய் துபே தன் பதவியில் இருந்து இன்று விலகினார்.
jet airways
அவருடன் அந்நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலரான அமித் அகார்வாலும் இன்று பதவி விலகியுள்ளார். இருவரும் தங்களின் தனிப்பட்ட காரணத்திற்காக பதவி விலகியுள்ளதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களான ராஜ்ஸ்ரீ பதி, கவுரங் ஹேட்டி போன்ற பலர் தங்களின் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
ஜெட் ஏர்வேஸ் விமானங்களின் பைலட்களுக்கு கூட ஊதியம் வழங்காமல் அந்நிறுவனம் காலம் தாழ்த்தி வந்தது குறிப்பிடத்தக்கது.