ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி கைது! - JeM terrorist arrested

ஸ்ரீநகர்: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஜம்மு காஷ்மீர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Terrorists
Terrorists
author img

By

Published : Feb 13, 2020, 8:30 PM IST

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்ததாக கூறப்பட்டு வந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஜம்மு காவல்துறையினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி, ஒருவரை ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில், பயங்கரவாதியின் பெயர் தவுஃபிக் அகமது பட் எனவும்; அவர் மோங்கமா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் நீக்கும் - சிதம்பரம் நம்பிக்கை

ABOUT THE AUTHOR

author-img

...view details